பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)

Thara
Thara @cook_26879129

என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena

பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)

என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப்தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பீர்க்கங்காய்
  2. 1/2அல்லது1கப்கர கரப்பாக அரைத்தவேர்க்கடலை
  3. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பீர்க்கங்காய் தோல் சீவி கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிந்தவுடன் அதில் காயினை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    வதங்கும் காயுடன் மஞ்சள் தூள் சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்

  4. 4

    இது நீர் காய் என்பதால் தண்ணீர் குறைவான அளவில் தான் தேவைப்படும், நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விட்டு அத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து வேகவைக்க வேண்டும்

  5. 5

    நன்கு வெந்து நீர் சுன்டி வரும் போது வேர்க்கடலை தூளை போட்டு கலந்து விட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்

  6. 6

    கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி நன்கு கிளறி இறக்கவும்....சுவையான பீர்க்கங்காய் பொறியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes