இஞ்சி பூண்டு தொக்கு (Inji poondu thokku recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

இஞ்சி பூண்டு தொக்கு (Inji poondu thokku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்,தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி
  2. 1 கப், தோல் உறித்த பூண்டு
  3. 1 நெல்லிக்காய் அளவு, புளி
  4. 50 கிராம், வெல்லம்
  5. உப்பு சிறிதளவு,
  6. வரமிளகாய் காரத்திற்கேற்ப,
  7. 5 தேக்கரண்டிமல்லித்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் 3 தேக்கரண்டியளவு எண்ணெய் ஊற்றி அதில் 1 கப் தோல் சீவி நறுக்கிய இஞ்சியை சேர்த்து வதக்கவும் இஞ்சி ஓரளவு வதங்கிய பின் 1 கப் பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்

  2. 2

    இஞ்சியும் பூண்டும் வதங்கிய பின் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, வரமிளகாய், மல்லித்தூள் 5 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும், பின்பு அதோடு 1 நெல்லிக்காயளவு புளி சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்பு அதை அடுப்பை விட்டு இறக்கி நன்கு ஆற வைக்கவும், பின்பு மசாலா கலந்த இஞ்சி பூண்டு கலவையை மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டியளவு நீர் சேர்த்து லேசான சொர சொரப்பு பதம் வரும் வரை அரைக்கவும்

  4. 4

    பின்பு கடாயில் 5 தேக்கரண்டியளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்கு கிளரவும் லேசான கொதி வந்த பின் 50 கிராம் வெல்லம் சேர்த்து கிளரவும் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளரவும்

  5. 5

    இப்போது இஞ்சி பூண்டு தொக்கு தயார். இதை சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

  6. 6

    மேலும் இதை காற்று புகாத பாட்டிலில் கை படாமல் வைத்தால் 2 வாரம் பயன் படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes