ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது...

ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)

#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1ஆப்பிள்
  2. 1கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசிமாவு
  4. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. ஒரு சிட்டிகை சோடா உப்பு
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    மாப்பிள்ளை நீள வாக்கில் நறுக்கிகொள்ளவும்

  2. 2

    ஒரு பவுலில் கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்துக்கவும்

  3. 3

    அத்துடன் தேவையான தண்ணி சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வெச்சுக்கவும்

  4. 4

    ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஆப்பிள் துண்டு ஒவொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போடவும்

  5. 5

    நன்கு இரண்டுபக்கவும் திருப்பி போட்டு சிவந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும், மீதி எல்லாவற்றையும் இதேபோல் பொரித்தெடுக்கவும்.. சுவையான ஆப்பிள் பஜ்ஜி சுவைக்க தயார்..

  6. 6

    இதுக்கு தொட்டு கொள்ள சட்னி எதுவும் தேவை இல்லை.. இனிப்பு கலந்த கார சுவையுடன் இருக்கும்.. செய்து பார்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes