முட்டை தம் பிரியாணி (Egg Dum Biryani recipe in tamil)

முட்டை தம் பிரியாணி (Egg Dum Biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உறித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது,வறுத்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்க்கவும்.
- 4
பின் மஞ்சள் தூள்,தனியா தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி, ஸ்டவ் ஆஃப் செய்து விட்டு தயிர், நறுக்கிய மல்லி புதினா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் சூடு செய்து இறக்கவும்.
- 5
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து பட்டை,கிராம்பு, ஏலக்காய்,மல்லி புதினா சேர்த்து வதக்கி மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும்,கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். முக்கால் பதம் வரும் வரை வேக வைக்கவும்.
- 6
முட்டையை வேகவைத்து தோல் உரித்து, போர்கில் மூன்று,நான்கு இடங்களில் குத்தி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் முட்டைகளை சேர்த்து மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
- 7
பின் முக்கால் பதம் வெந்த சாதத்தில்,தயார் செய்து வைத்துள்ள மசாலா தயிர் கலவையை சேர்க்கவும்.
- 8
பின் மசாலா கலந்த முட்டைகளை வைத்து அழுத்தி,நறுக்கிய மல்லி,புதினா, வறுத்து வைத்துள்ள வெங்காயம், எலுமிச்சை சாறு சேர்த்து மூடி ஒரு தோசை தவாவை சூடு செய்து அதன் மேல் வைக்கவும். மிதமான சூட்டில் இருபது நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
- 9
இப்பொழுது திறந்தால் அருமையான முட்டை பிரியாணி தயார்.
- 10
பின் நன்கு கலந்து எடுத்து பரிமாறும் தட்டிற்கு மாற்றவும். மல்லி, புதினா இலை தூவி சுவைக்கக்கொடுக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான முட்டை தம் பிரியாணி சுவைக்கத் தயார்.
Similar Recipes
-
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
More Recipes
கமெண்ட் (4)