காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)

காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி மசாலா தயாரிக்க, எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒரு இரும்பு பேனில், மிதமானதீயில் வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.
- 2
காளானை கழுவி சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். மல்லி மற்றும் புதினா இலைகளை நறுக்கி கொள்ளவும்.
- 3
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை இரண்டு தண்ணீரில் கழுவி ஊற்றிவிட்டு, மூன்றாம் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின், பாதியளவு மல்லி புதினா இலைகள், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.2 நிமிடம் வதக்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 5
கூடவே தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து தக்காளி மசியாமல் வதக்கிக் கொள்ளவும்.
- 6
பின் காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து பிரியாணி மசாலா தூள் சேர்க்கவும்.
- 7
தண்ணீர் கொதி வந்தபின் அரிசியை வடித்து சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து,மீதமுள்ள மல்லி புதினா இலைகளை சேர்த்து உப்பு சரி பார்க்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி ஆவி வந்தபின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் தம் செய்யவும்.
- 8
மிகவும் சுவையான காளான் பிரியாணி தயார். அரிசி உதிரி உதிரியாக அருமையாக இருக்கும். தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்தப் புத்தாண்டிற்கு செய்து குடும்பத்துடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள். Asma Parveen -
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes
More Recipes
கமெண்ட்