கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன்

கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)

#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 15 நிமிடம்
8 பரிமாறுவது
  1. 1750 கிராம் சிக்கன்
  2. 3 டீஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/2 கப் கெட்டித்தயிர்
  4. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 1 எலுமிச்சை சாறு
  10. தேவையானஅளவு உப்பு
  11. 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி 15 நிமிடம்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மிளகுத்தூள்,மஞ்சள்தூள், உப்பு இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    முழு கோழியை தோல் உரித்து நன்றாக கழுவி கீறல் இட்டுக் கொள்ளவும் பிறகு தண்ணீர் இல்லாமல் துடைத்து தயாரித்து வைத்திருக்கும் மசாலாவுடன் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு தேய்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்

  3. 3

    ஊறிய சிக்கனை எடுத்து படத்தில் காட்டியவாறு அதனுடைய கால்கள் மற்றும் உடல் பகுதிகளை நன்றாக இறுக்கி கயிற்றினால் கட்டவும் பிறகு தலைப்பகுதியை ஒரு குச்சியின் உதவி கொண்டு குத்தி விடவும் பிறகு இறக்கைகளும் இதேபோல் குச்சியால் குத்தவும்

  4. 4

    அவனின் அடிப்பகுதியில் டிஷ்யூ பேப்பர் வைக்கவும் பிறகு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் சிக்கனை வைக்கவும் பிறகு அவனை 220 டிகிரி செல்சியஸில் 40 நிமிடம் வைக்கவும்

  5. 5

    40 நிமிடத்தில் 20 நிமிடம் கழித்து ஸ்டாண்டை வெளியே எடுத்து திருப்பி எல்லா இடங்களிலும் எண்ணை தேய்த்து மீதி இருக்கும் 20 நிமிடம் வைக்கவும்... இறுதியாக கிரில் மோடில் 10 நிமிடம் வைக்கவும் பிறகு திருப்பி போட்டு கிரில் மோடில் மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்

  6. 6

    இப்போது வெளியே எடுத்து எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.. அட்டகாசமான சுவையில் கிரில் ஃபுல் சிக்கன் தயார்

  7. 7

    குறிப்பு: சிக்கனை இரவு முழுவதும் ஊற வைப்பதினால் மசாலா நன்றாக உள்ளிறங்கும்... சிக்கன் வேகும் போது விரியும் தன்மை உடையது அதனால் கயிறு கட்டினால் விரியாது... டிஷ்யூ பேப்பரை அடியில் வைப்பதினால் விழும் மசாலா கருகிப் போகாது அதனால் கருகும் வாசனை வராது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes