எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Varietyrice
தக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை

எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)

#Varietyrice
தக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 5பழுத்த தக்காளி பொடி பொடியாக நறுக்கியது
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  4. ஒரு பட்டை ஒரு ஏலக்காய்
  5. சிறிதுஅளவு மல்லி இலை புதினா இலை
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
  8. ஒரு தேக்கரண்டிகரம் மசாலா பவுடர்
  9. கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பட்டை ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    தக்காளி உள்ளே போட்டவுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை புதினா இலை ஆகியவற்றைப் போட்டு தக்காளி நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்

  4. 4

    தக்காளி நன்கு வெந்ததும் நான் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை உள்ளே கொட்டி கிளறவும்

  5. 5

    இப்போது சுவையான தக்காளி சாதம் எளிய முறையில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes