முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)

Prabharatna
Prabharatna @cook_28308454

பாரம்பரிய சமையல் #LoveCooking

முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)

பாரம்பரிய சமையல் #LoveCooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 5முட்டை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  5. 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  6. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. 1/2 கப்தண்ணீர்
  9. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. பட்டை, லவங்கம், கடல் பாசி, சிறிதளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் ஆயில் ஊற்றி பட்டை லவங்கம் கடற்பாசி சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்பு அதில் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.பின்பு அதில் வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு 2 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் இதனுடன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சேர்க்கவும்.இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

  4. 4

    பின்பு ஒரு குக்கரில் ஐந்து முட்டைகளை வேக வைத்து தோல் உரித்து எடுக்கவும்.வேகவைத்த முட்டைகளை பாதி பாதியாக வெட்டி இந்த தொக்கு உடன் சேர்த்து வேகவிடவும்.பின்பு இதனுடன் அரைக் கப் மல்லி இலை சேர்த்து கொதிக்கவிடவும்.ஒரு பத்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிட்டு ஆயில் வெளிவந்தவுடன் அடுப்பை அணைக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான முட்டை தொக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Prabharatna
Prabharatna @cook_28308454
அன்று

Similar Recipes