புதினா சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

புதினா சாதம்

Mahes
Mahes @cook_26529332

புதினா சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
  2. புதினா - ஒரு கட்டு
  3. கொத்தமல்லி - ஒரு கட்டு
  4. 3புளி - நெல்லிக்காய் அளவு மிளகாய்வற்றல் -
  5. பூண்டு - 2 பல்லு இஞ்சி - 1 துண்டு
  6. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி தேங்காய் - 4 தேக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்

  2. 2

    வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.

  3. 3

    மிக்சியில் ஆறவைத்தவற்றை போட்டு அதனுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

  4. 4

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்

  5. 5

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.

    * அடுத்து அதில் உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.

    * இறக்கிய கலவையில் உதிராக வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahes
Mahes @cook_26529332
அன்று

Similar Recipes