ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன்.

ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil

இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ரப்டீ செய்வதற்கு
  2. 500ml பால்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 ஏலக்காய்
  5. 3 குங்குமப்பூ
  6. சர்க்கரை பாகு செய்வதற்கு
  7. 1/2 கப் சர்க்கரை
  8. பிரட் பொரிப்பதற்கு
  9. 1/2 கப் தண்ணீர்
  10. 5பிரட் துண்டுகள்
  11. எண்ணெய் பொரிப்பதற்கு
  12. பரிமாறுவதற்கு முன் தேவைப்படும் பொருள்கள்
  13. 4 பருப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் 500ml பாலை சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    இதை சுமார் ஒரு இருபது நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

  3. 3

    இப்பொழுது பாத்திரத்தின் ஓரத்தில் பால் ஆடை தங்கும் அதை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து மீண்டும் பாலில் சேர்த்து விடவும். இவ்வாறு செய்வதால் நமது ரப்டி மிகவும் ருசியாக வரும்

  4. 4

    இப்பொழுது இதில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  5. 5

    இப்பொழுது நம் ரப்டி தயார்.

  6. 6

    ஒரு கடாயில் அரை கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

  7. 7

    நம்மளுடைய சர்க்கரை பாகு தயார். இந்த ரெசிபிக்கு நீங்கள் கம்பி பதம் பார்க்கும் அவசியமில்லை சாதாரணமாக சர்க்கரையை கொதிக்க வைத்தால் போதும்.

  8. 8

    இப்பொழுது ஒரு ஐந்து பிரட் துண்டுகளை எடுத்து முக்கோண வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

  9. 9

    இப்பொழுது வெட்டி வைத்த பிரெட் துண்டுகளை நெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  10. 10

    பொரித்தெடுத்த பிரட் துண்டுகளை நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  11. 11

    இப்பொழுது சர்க்கரை பாகில் இருந்து பெரும் பிரட் துண்டுகளை மட்டும் எடுத்து ஒரு பிளேட்டில் வைக்கவும்.

  12. 12

    நாம் செய்து வைத்திருக்கும் ரப்டீ பிரெட்டின் மேலே ஊற்றவும்.

  13. 13

    பாதாம் துண்டுகளை சிறிதாக நறுக்கி மேலே தூவி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakarasaathamum_vadakarium
அன்று
Chennai , India

Similar Recipes