கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)

Suganya G
Suganya G @cook_29740851

கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/2 கப்மிதமான சூட்டில் தண்ணீர்
  3. 1/2 தேகஉப்பு
  4. சுவைக்கேற்பசர்க்கரை
  5. 4 மேகதேங்காய் துருவல்
  6. 1 மேகநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் 1 கப் கோதுமை மாவு எடுத்து கடாயில் 5 நிமிடம் நன்கு வறுத்து எடுக்கவும்

  2. 2

    நன்கு வறுத்து எடுத்த மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆற விடவும்.

  3. 3

    சூடு ஆறியதும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பிசைந்த மாவை மிக்சி ஜாரில் மாற்றி 2 முறை பல்ஸ் மோடில் போட்டு கொள்ளவும்.

  5. 5

    பின்னர் இட்லி பாத்திரத்தில் காய்ந்த துணியில் ரெடி பண்ண மாவை போட்டு அந்த மாவின் மேல் தேங்காய் துருவல் சேர்த்து 5 அல்லது 6 நிமிடம் நன்கு வேகவைத்து எடுக்கவும்

  6. 6

    வேக வைத்த மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆறுவதற்கு முன்பே தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  7. 7

    சுவை மற்றும் உடல் நலத்தை அதிகமாக 1 மேக நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்..

  8. 8

    சுவை மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க நம் பாரம்பரிய கோதுமை மாவு புட்டு ரெடி...
    வாழ்க வளமுடன் 🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Suganya G
Suganya G @cook_29740851
அன்று

Similar Recipes