முட்டை சால்னா

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

முட்டை சால்னா

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2டீ ஸ்பூன் கடலை பருப்பு
  2. 1டீ ஸ்பூன் ஜீரகம்
  3. 1டீ ஸ்பூன் சோம்பு
  4. 3காஞ்ச மிளகாய்
  5. 1டீ ஸ்பூன் மிளகு
  6. 2ஏலக்காய், கிராம்பு, பட்டை
  7. 5சின்ன வெங்காயம்
  8. 1 பெரிய வெங்காயம்
  9. 2தக்காளி
  10. 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 2டீ ஸ்பூன் மல்லி தூள்
  12. 1/4 கப் தேங்காய்
  13. 2பச்சை மிளகாய்
  14. தேவைக்குஉப்பு, தண்ணீர், கருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடலை பருப்பு, காஞ்ச மிளகாய், சின்ன வெங்காயம், 1தக்காளி, மிளகு, சோம்பு, ஜீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய் நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

  2. 2

    ஆறியதும் நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய், சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்பு அதில் தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    நன்கு வதக்கியதும் சிறிது தண்ணீர் போட்டு நன்கு குழைய வேகவைக்கவும். அதில் அரைத்த விழுதை, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

  6. 6

    பச்சை வாடை போனதும் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    நன்கு கொதித்ததும் கருவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes