*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)

இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம்.
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில், பூண்டு, பல.மிளகாய், இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், உப்பு, ம.தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 4
அடுத்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
- 5
வதங்கியதும், தக்காளி,காஷ்மீரி மிளகாய் தூள், போடவும்.
- 6
போட்டு வதங்கியதும்,கரம் மசாலா தூள்,தனியா தூள் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 7
மிக்ஸி ஜாரில், தேங்காய், சோம்பு,முந்திரி, பட்டை, கிராம்பு, போடவும்.
- 8
அடுத்து பொட்டுக் கடலையை போட்டு, தண்ணீர் விட்டு நன்கு அரைத்து,கொதிக்கும், சால்னாவில் சேர்க்கவும்.
- 9
நன்கு கொதித்து, ஒன்று சேர, கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே, கொத்தமல்லி தழை, நெய் விடவும்.
- 10
சால்னாவை பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன் நெய் விடவும்.இப்போது, சுவையான, சுலபமான,*ப்ளெயின் சால்னா* தயார்.இது, இட்லி, தோசை, சப்பாத்தி,பரோட்டா,ஆகியவற்றிற்கு,ஆப்ட்டாக இருக்கும். செய்து அசத்துங்கள்.
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)