சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை மஞ்சள் தூள்,எண்ணெய் சேர்த்து குழைய வேகவைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மேலும் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய்,கடுகு,கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து வதங்கியதும்,தயாராக வைத்துள்ள பருப்பை சேர்க்கவும்.
- 4
பின்னர் தேவையான அளவு தண்ணீர்,ரசப்பொடி சேர்த்து கலந்து விடவும்.
- 5
கல் உப்பு சேர்க்கவும். ரசம் நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
- 6
கொஞ்சம் சூடு ஆறியவுடன் ஒரு பௌலில் சேர்க்கவும். அதன் பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான எலுமிச்சை பருப்பு ரசம் சுவைக்கத்தயார். சாதத்துடன் கலந்து சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.
- 8
குறிப்பு:எலுமிச்சை சாறு இறக்கி வைத்து தான் சேர்க்க வேண்டும்.முதலிலேயே சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் கசப்பாக மாறிவிடும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
-
-
-
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
-
-
-
இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம். Swarna Latha -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15091827
கமெண்ட் (2)