சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)

சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- 2
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அதில் ஒரு பாக்கெட் ஹக்கா நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் 5 நிமிடம் கழித்து நூடுல்ஸ் வெந்ததை உறுதி செய்துவிட்டு அதன் தண்ணீர் முழுவதும் வடித்து விட்டு தனியாக எடுத்து வைக்க வேண்டும்
- 3
அடுத்து ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவேண்டும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்
- 4
தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நாம் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் 25 கிராம் சீஸ் துருவளை சேர்க்க வேண்டும்
- 5
முட்டை ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட வேண்டும் இருபுறமும் நன்றாக வெந்து இருக்க வேண்டும்
- 6
பிறகு முட்டை வெந்ததும் முட்டையை வேறு ஒரு தட்டில் வைத்து அதனை கத்தி கொண்டு நாம் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ள வேண்டும்
- 7
அடுத்து வேறு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்
- 8
அடுத்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்க வேண்டும் அதோடு 50 கிராம் கேரட்டை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும் 50 கிராம் குடை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்
- 9
அடுத்து அதில் 50 கிராம் பிரைட்ரைஸ் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் அடுத்து அதனுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்
- 10
நாம் கட் செய்து வைத்துள்ள சீஸ் முட்டை துண்டுகளை அதனுடன் சேர்த்து கூடவே ஒரு கையளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கிளறி விட வேண்டும்
- 11
இதோ மிகவும் ருசியான எல்லோரும் விரும்பிச் சுவைக்கக்கூடிய சீஸி எக் ஸ்ட்ரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ் தயார் வாங்க சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்
#vahisfoodcornerஇந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்