எண்ணெயில்லாத மோதிச்சூர் லட்டு

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

# AsahiKaseiindia

எண்ணெயில்லாத மோதிச்சூர் லட்டு

# AsahiKaseiindia

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒன்றரை மணி நேரம்
நான்கு பேர்
  1. இரண்டு கப்கடலைப்பருப்பு
  2. இரண்டு கப்சர்க்கரை
  3. சிறிதுஏலக்காய் தூள்
  4. சிறிதுஆரஞ்சு கலர் பவுடர்
  5. சிறிதுமுந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

ஒன்றரை மணி நேரம்
  1. 1

    கடலைப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை ஒரு ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு அதில் பரத்தி ஓடிஜி அவனில் பத்து நிமிடம் 160 டிகிரியில் வைத்து எடுக்கவும்.

  3. 3

    அது நன்கு ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கெட்டியாகும் போது சிறிது கேசரி பவுடர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    அந்த சர்க்கரை பாகில் உதிர்த்து அரைத்த கலவையைக் கொட்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும். அதில் முந்திரி திராட்சையும் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாக பிடிக்கவும்.

  6. 6

    துளி கூட எண்ணெய் மற்றும் நெய் சேர்க்காத மோதிச்சூர் லட்டு தயார்.

  7. 7

    ஆரோக்யமான லட்டு இனி அடிக்கடி சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes