பாசிபருப்பு ஸ்டப்டு மில்க் பன்(moong dal stuffed milk bun)

Sowmya
Sowmya @vishalakshi

பாசிபருப்பு ஸ்டப்டு மில்க் பன்(moong dal stuffed milk bun)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 நபர்கள்
  1. 125 கிராம் மைதா மாவு
  2. 1 டம்ளர் பால்
  3. 1/4டீ ஸ்பூன் உப்பு
  4. 2 டேபிள்ஸ்பூன் சக்கரை
  5. 1டீ ஸ்பூன் இன்ஸ்டண்ட் ஈஸ்ட்
  6. 2 டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  7. 50 கிராம் பாசி பருப்பு
  8. 50 கிராம் வெல்லம்
  9. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  10. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் பாலுடன் 125 கிராம் மைதா மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அதனுடன் கால் டீ ஸ்பூன் உப்பு இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டண்ட் ட்ரை ஈஸ்ட் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் வரை நன்றாக எல்லாவற்றையும் கலந்து பிசைந்து கொள்ளவேண்டும் கடைசியாக மிருதுவான உருண்டையாய் கையில் ஒட்டாத வாறு மாவு உருண்டை வரும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு லேசாக வெண்ணையை மாவின் எல்லா புறமும் படும்படி தடவி விட்டு ஒரு துணி வைத்து மூடி ஒன்றரை மணி நேரம் ஊற விட வேண்டும்

  6. 6

    அடுத்து 50 கிராம் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து விட்டு அதில் அரை டம்ளர் பால் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  7. 7

    பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    பாசிப்பருப்பிற்கு சமமான அளவு வெல்லம் அதாவது ஐம்பது கிராம் வெல்லத்தை தூளாக்கிக் கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.(லேசான தீயில் வைத்து வெல்லத்தை காய்ச்சவேண்டும் கருக விடாமல் பார்த்துக் கொள்ளவும்)

  9. 9

    வெல்லம் கரைந்தவுடன் அதனை நாம் அரைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து கலக்கி விட வேண்டும்

  10. 10

    பாசிப்பருப்பு வெல்லம் கலவையை நன்றாக கலந்து விட்டு அதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் தண்ணியாக இருக்கும் பதம் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்

  11. 11

    பாதியளவு கெட்டியானவுடன் நாம் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் அதாவது நாம் கரண்டியில் எடுத்தோமானால் கரண்டியிலிருந்து பாசிப்பருப்பு வெல்லம் கலவை கீழே விழாத அளவிற்கு கெட்டியாக வேண்டும் அந்த அளவிற்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்

  12. 12

    கெட்டியான பதம் வந்தவுடன் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம்

  13. 13

    ஒன்றரை மணிநேரம் ஆகிய பிறகு நாம் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து விரித்துக் கொள்ளலாம்

  14. 14

    அதேபோல் பாசிப்பருப்பு கலவையும் நாம் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து நீளவாக்கில் உருட்டி அதனை நாம் தேய்த்து வைத்துள்ள மாவில் ஒரு ஓரத்தில் வைத்து பாதி அளவு வரை உருட்டிக் கொள்ள வேண்டும் (படத்தில் இருப்பது போல)

  15. 15

    மீதி உள்ள பாகத்தில் கத்தி வைத்து நாம் சிறுசிறு கோடுகளாக அதனை வெட்டிக் கொள்ள வேண்டும் பிறகு நாம் உருட்டி வைத்துள்ள பாதியை நாம் வெட்டிய துண்டுகளின் மேல் அப்படியே உருட்ட வேண்டும் (படத்தில் இருப்பது போல)

  16. 16

    அடுத்து இரு முனைகளையும் சேர்த்து வளைத்து ஒட்டிக்கொள்ள வேண்டும் (படத்தில் இருப்பது போல)

  17. 17

    அதன் மேல் பால் வைத்து எல்லா இடமும் படும்படி தடவி விட்டு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும்

  18. 18

    அடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் லேசாக உப்பு தூவி விட்டு அதன் மேல் ஒரு ஸ்டாண்டை வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வரை பிரீ ஹீட் செய்யவேண்டும் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்

  19. 19

    அடுத்து பேக்கிங் பேன் அல்லது ஏதாவது ஒரு சில்வர் தட்டில் லேசாக வெண்ணை தடவி அதன் மேல் நாம் ரெடியாக வைத்துள்ள பன் உருண்டையை எடுத்து ஒவ்வொன்றாக வைக்கவேண்டும் பிறகு அந்த தட்டினை எடுத்து நாம் பிரீ ஹீட் செய்திருக்கும் ஸ்டாண்டின் மேல் வைக்கவேண்டும்

  20. 20

    பிறகு மூடி வைத்து 35 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து பேக் செய்ய வேண்டும்

  21. 21

    இதோ குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான பாசிப்பருப்பு ஸ்டப்டு பன் தயார்...கடைகளில் வாங்கும் பன்களை விட இது மிகவும் மிருதுவாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes