வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#maduraicookingism
வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.....

வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)

#maduraicookingism
வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
7 பேர்
  1. ஒரு முழு வாழைப்பூ
  2. 1/4 கிலோ கடலை பருப்பு
  3. 7காய்ந்த மிளகாய்
  4. 3 ஸ்பூன் சோம்பு
  5. 20 பல் பூண்டு
  6. 1பெரிய துண்டு இஞ்சி நறுக்கியது
  7. 1/4 லிட்டர் ரீபைண்ட் ஆயில்
  8. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  9. சிறிதுகருவேப்பிலை
  10. சிறிதுகொத்தமல்லி
  11. 1 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    வாழைப்பூ வடை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்...

  2. 2

    முதலில் 1/4 கிலோ கடலைப்பருப்பை இரண்டு முறை கழுவி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்...

  3. 3

    வாழைப்பூவை எடுத்து அதில் உள்ள நரம்பை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும்.....

  4. 4

    பிறகு அரை மணி நேரம் ஊறிய கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடித்தெடுத்து வைக்கும்.. ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய்,சேர்த்து நன்கு அரைக்கவும், பிறகு அதில் கடலைப் பருப்பையும் சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் எடுக்கவும்.

  5. 5

    தண்ணீரில் நறுக்கிப் போட்ட வாழைப்பூவை வடிகட்டி சிறிதளவு கூட தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்......பிறகு நாம் அரைத்த வடை மாவில் வாழைப்பூ, கருவேப்பிலை, கொத்தமல்லி,நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்...

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியவுடன் வாழைப்பூ வடை மாவை தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்....

  7. 7

    வடையை இரு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும்..... சுட சுட அருமையான வாழைப்பூ வடை ரெடி.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes