மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF6 வடை
நாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு.

மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)

#CF6 வடை
நாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் கடலை பருப்பு
  2. 200 கிராம் மரவள்ளிக்கிழங்கு
  3. இரண்டு பெரிய வெங்காயம்
  4. சிறிதளவுகொத்தமல்லி தலை
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சின்ன துண்டு இஞ்சி
  8. இரண்டு பச்சை மிளகாய்
  9. மூன்று வர மிளகாய்
  10. அரை ஸ்பூன் சோம்பு
  11. கால் ஸ்பூன் குறைவா பெருங்காயத் தூள்
  12. அரை ஸ்பூன் உப்பு
  13. கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையானவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 வரமிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், 100 கிராம் கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும், 200 கிராம் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுத்து அரைத்ததை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய 2 பெரிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லித் தழை கருவேப்பிலை, கால் ஸ்பூன் குறைவா பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அரை ஸ்பூன் உப்பு கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    கலந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும் சிறு சிறு உருண்டைகளாக பிடிப்பதன் மூலம் எண்ணெய்யில் பொரிக்கும் பொழுது தட்டி போடுவதற்கு சுலபமாக இருக்கும்

  4. 4

    அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டிய வடை மாவை ஒன்று ஒன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. 5

    அவ்வளவுதான் ரொம்பவும் ருசியான மரவள்ளிக்கிழங்கு வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes