கிரில் சிக்கன் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

கிரில் சிக்கன் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 number
  1. முதலாவது மசாலா
  2. 1 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 1/2 ஸ்பூன்உப்புத்தூள்
  4. 5 ஸ்பூன்எலுமிச்சைச்சாறு
  5. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. இரண்டாவது மசாலா
  7. 2 ஸ்பூன்கரம் மசாலா
  8. 2 ஸ்பூன்சீரகப் தூள்
  9. 2 ஸ்பூன்மல்லித்தூள்
  10. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  11. 1 ஸ்பூன்உப்புத்தூள்
  12. 1/2 கப்தயிர்
  13. 1/4ஸ்பூன்சிவப்பு கலர்
  14. ஒரு ஸ்பூன்மிளகுத்தூள்
  15. 50 கிராம்வெண்ணை பொரிக்க

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முழு கோழியை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்

  2. 2

    அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைக்கவும்

  3. 3

    கோழியை கலந்து வைத்துள்ள மசாலாவில் நன்கு பிரட்டி எடுக்கவும் பிறகு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்

  4. 4

    பிறகு அதே மசாலா புரட்டிய வாணலியில் இரண்டாவது மசாலாக்களை சேர்க்கவும்

  5. 5

    சேர்த்த மசாலாக்களை நன்றாக கலந்து கொள்ளவும்

  6. 6

    பிறகு நாம் ப்ரிட்ஜில் எடுத்து வைத்திருந்த முழு கோழியை கலந்து வைத்துள்ள மசாலாவில் நன்றாகப் புரட்டி எடுக்கவும் ஒரு இரும்பு வானலியில் 50 கிராம் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சூடேற்றவும் நாம் பிரட்டி வைத்துள்ள முழு கோழியை வாணலியில் சேர்க்கவும்

  7. 7

    வாணலியில் சேர்த்து நன்றாக சிறு தீயில் நன்கு திருப்பி திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்

  8. 8

    இப்பொழுது ஓவன் இல்லாமல் வாணலியில் கிரில் சிக்கன் சூப்பராக ரெடியாகிவிட்டது இந்த மாதிரி ஒருமுறை செய்து பாருங்கள் நண்பர்களே...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes