முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
5 பரிமாறுவது
  1. ஒரு கிலோமுழு கோழி
  2. ஒரு கப்கெட்டி தயிர்
  3. 50 கிராம்சிக்கன் மசாலா
  4. 50 கிராம்கரமசாலா
  5. உப்புத்தூள்
  6. 25மிளகுத்தூள்
  7. 25 கிராம்மஞ்சள் தூள்
  8. 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. அரை லிட்டர்எண்ணெய்
  10. 2 ஸ்பூன்மல்லி புதினா கருவேப்பிலை அரைத்தது
  11. 2 ஸ்பூன்எலுமிச்சம் சாறு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    கடையில் முழு கோழிவாங்கி வரவும் அதில் மஞ்சள் உப்பு எலுமிச்சம் சாறு கலந்து நன்கு கழுவி வைக்கவும்

  2. 2

    பிறகு அதில் மஞ்சள்தூள் உப்பு எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து முழுவதும் 10 நிமிடம் ஊறவிடவும் கோழியை அங்கங்கு கீரி வாங்கி வரவும்

  3. 3

    ஒரு கிண்ணத்தில் சிக்கன் பொடி கரம்மசாலா மிளகுத்தூள் கெட்டித்தயிர் எலுமிச்சம் சாறு உப்பு அரைத்த கறிவேப்பிலை மல்லி புதினா பேஸ்ட் இஞ்சி பேஸ்ட் சீரகம் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும் அதை கோழியில் நன்கு மசாலா சேரும் படி கையால் உள் புறமும் மசாலாவையும் நன்கு தேய்த்து வைக்கவும்

  4. 4

    பிறகு அதன் காலை சிறு நூலால் நன்கு சேர்த்து கட்டி வைக்கவும் இந்த கோழியை ஃப்ரிட்ஜில் வாழை இலை கொண்டு மூடி முதல்நாள் வைத்துவிடவும்

  5. 5

    மறு நாள் சமைக்க ஆரம்பிப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்பு எடுத்து வெளியில் வைத்துவிடவும் அடுப்பில் பெரிய கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் இந்தக் கோழியை அதில் போடவும் தீயை குறைத்து வைத்து திருப்பி திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்க வேண்டும் எலும்பு நன்கு வேக வேண்டும் என்பதால் குறைந்த தீயில் வேக விட்டு பொரித்து எடுக்கவும் இது ஒரு முறை

  6. 6

    இரண்டாவது முறை முழு கோழியையும் சிறிது எண்ணை விட்டு குக்கரில் வைத்து மூடி இரண்டு விசில் வந்ததும் எடுத்துவிட்டு அதை எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்

  7. 7

    மூன்றாவது முறை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சின்ன ஸ்டாண்ட் போட்டு ஒரு மேலாக ஒரு தட்டு வைத்து அதன் மேல் இந்த கோழியை வைத்து மூடி போட்டு மூடி அரைமணி நேரம் வேகவிட்டு எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்

  8. 8

    மேற்கூறிய இரண்டு முறைக்கும் பொரிப்பதற்கு அதிகம் எண்ணைய் தேவைப்படாது பெரும்பாலும் சிக்கன் வறுப்பதற்கு சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து ஆற அந்த கோழியில் இருக்கும் கொழுப்பு இறங்கி அதிலேயே கறி நன்கு வெந்து விடும்

  9. 9

    சுவையான முழு கோழி வறுவல் வீட்டிலேயே மிகவும் எளிதாக குறைந்த விலையில் செய்து சாப்பிடலாம் முழு திருப்தியாக வெளியில் வாங்கி சாப்பிடுவது என்றால் ஒரு கிலோ கோழி 800 ரூபாயை நெருங்கும் ஆனால் அதையே நாம் 200 ரூபாய்க்குள் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்

  10. 10

    இதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளாமல் என்றாவது ஒருநாள் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது செய்து சாப்பிடும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகளும் சந்தோஷப்படுவார்கள் விருந்தினர் வரும்போது செய்து சாப்பிடக் கொடுத்தார் பாராட்டுக்கள் கிடைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes