செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)

#banana
சத்துக்கள் அதிகமுள்ள செவ்வாழையில் புதுமையான ஆரோக்கியமான ஒரு இனிப்பு பண்டம்
செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
#banana
சத்துக்கள் அதிகமுள்ள செவ்வாழையில் புதுமையான ஆரோக்கியமான ஒரு இனிப்பு பண்டம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 100 கிராம் கடலை மாவை சேர்த்து அதனை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அடுத்து 50 கிராம் நெய்யை நாம் வறுத்து வைத்துள்ள கடலை மாவில் சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலந்து கொள்ள வேண்டும்
- 3
ஒரு பழுத்த செவ்வாழைப் பழத்தை தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
அடுத்ததாக வேறு ஒரு கடாயில் 100 கிராம் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து சர்க்கரை தண்ணீரில் நன்றாகக் கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு ஆகும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும்
- 5
அடுத்து சர்க்கரை பாகில் நாம் நெய்யுடன் கலந்து வைத்துள்ள வறுத்த கடலை மாவு கலவையையும் கலந்து நன்றாக கட்டி விழாமல் கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும் ஒரு ஐந்து நிமிடத்தில் மாவு கெட்டியாக ஆரம்பிக்கும்
- 6
அந்த நேரத்தில் நாம் மீதம் வைத்துள்ள 50 கிராம் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும் நன்றாக கெட்டியாகும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்
- 7
சர்க்கரைப்பாகு மாவு கலவை கெட்டியாக வந்ததும் அந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்துள்ள செவ்வாழைப்பழத்தை அதனுடன் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் கட்டி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..அவ்வளவுதான் அடுப்பை அணைத்து விடலாம் மிகவும் சுவையான செவ்வாழை மைசூர்பாகு தயார்... ஆறியதும் இதனை நாம் பிடித்த அளவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
- 8
அதற்கு ஒரு தட்டில் லேசாக நெய் தடவி எடுத்துக்கொள்ளலாம்
- 9
அடுத்து நாம் நெய் தடவி எடுத்துள்ள தட்டில் நாம் செய்து வைத்துள்ள செவ்வாழை மைசூர்பாகு கலவையை வைத்து மேலே கரண்டி கொண்டு சமமாக்கிக் கொள்ளலாம் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை மேல்புறத்தில் ஊற்றி தேய்த்து விட்டுக் கொள்ளலாம்
- 10
மேல்புறத்தில் நெய் சேர்த்து தடவி விட்டதும் அதனை ஒரு 15 நிமிடம் ஆற வைத்துக் கொள்ளலாம்
- 11
நன்றாக ஆறிய பிறகு அதனை நாம் வேறு ஒரு தட்டில் கவிழ்த்து மேலே உள்ள தட்டை தனியாக எடுத்துக்கொள்ளலாம் தட்டில் நெய் தடவி உள்ளதால் ஒட்டாமல் அழகாக வரும்
- 12
அடுத்து அதனை கத்திக்கொண்டு நாம் விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ளலாம்
- 13
இதோ எல்லோருக்கும் பிடித்தமான செவ்வாழையும் கலந்து இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு புதுமையான செவ்வாழை மைசூர்பாகு தயார் வாங்க சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
-
கீ (ghee) சப்பாத்தி வித் கீரை கூட்டு(90வது ரெசிபி)
கோதுமை மாவுடன் நெய் சேர்த்து செய்வதால் இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகஇருக்கும்.சப்பாத்தி நன்கு உப்பி வரும். இதற்கு சைட்டிஷ் கீரை கூட்டு ஆப்ட்டாக இருக்கும்.எந்த வகை கீரையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
மைசூர் பா(க்)கு(Mysuru Pak recipe in Tamil)
#karnataka*மைசூர் பாக்கு என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது.*மைசூர் அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார் சமையல் கலைஞர்கள்.(சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார். kavi murali -
-
-
-
-
-
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilkஇது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
-
-
-
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது. Jegadhambal N -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
-
-
-
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
😋😋மைசூர் பாக்😋😋😋
#CF2இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (4)