உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018

உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200 கிராம் உருளைக்கிழங்கு
  2. 1 கப் கடலைமாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1/4 ஸ்பூன் சோம்புத்தூள்
  7. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 3 பச்சைமிளகாய்
  9. 1/4 ஸ்பூன் கடுகு
  10. 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு பொரிக்க எண்ணெய்
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

  3. 3

    பிறகு கொத்தமல்லி இலை,மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  4. 4

    பிறகு அவற்றை ஆறவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை கடலைமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பிரித்தெடுக்கவும்.

  7. 7

    சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018
அன்று

Similar Recipes