எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Diwali2021

பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும்

எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)

#Diwali2021

பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
100 பேர்
  1. 2 கிலோ கருப்பு எள்ளு
  2. 1 கிலோ பொட்டுக்கடலை
  3. 3 கிலோ வெல்லம்
  4. 10 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    எள்ளை கழுவி சுத்தம் செய்து மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும் லேசா ஈரம் இருக்கும் போது வாணலியில் சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும்

    மெல்லிய தீயில் வைத்து வறுக்கவும் படபடவென்று பொரியும் பின் தனியே எடுத்து வைக்கவும் இதே போல எல்லா எள்ளையும் வறுத்து ஆறவிடவும்

    பின் மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு பொடித்து கொள்ளவும் நைசாக பொடி செய்ய கூடாது

  2. 2

    பின் பொட்டுக்கடலையை புடைத்து சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுத்து எடுத்து ஆறவிடவும் பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்

    பின் பொடித்த எள்ளு மற்றும் பொட்டுக்கடலையை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்

  4. 4

    திக்கான பதம் வந்ததும் (உருட்டு பதம் வந்ததும்) ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் பின் சிறிது சிறிதாக எள்ளு பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும் இரண்டு நிமிடம் ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  5. 5

    சத்தான சுவையான ஆரோக்கியமான எள்ளுருண்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes