கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#GA4
கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம்.

கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)

#GA4
கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 3/4 கப்- கருப்பு எள்ளு
  2. 1 கப்-வெல்லம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெல்லத்தை நன்றாக கத்தியால் சீவி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பை சிம்மில் வைத்து அதில் கருப்பு எள்ளு சேர்த்து நன்றாக பொரிய விடவும்.. பின்னர் அதை தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் அதே கடாயில் சீவிய வெல்லத்தை 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு படத்தில் காட்டியபடி பதம் வரும் வரை கலந்து கொள்ளவும்... வெல்லத்தை தண்ணீர் கப் 2 துளி விட்டு கையில் எடுத்தால் கையில் எடுக்க வரும்... இதில் வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..2-3 நிமிடங்கள் கழித்து எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி தேவையான அளவு வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    தேவையெனில் சிறிது அலங்கரிக்க பிஸ்தா துருவி மேலே சேர்த்துக் கொள்ளலாம்.இப்பொழுது சுவையான ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு ரெசிபி... கருப்பு எள்ளு சிக்கி/பர்பி தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes