வெண்பொங்கல் - in my way(venpongal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

வெண்பொங்கல் - in my way(venpongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/4 கப் பாசிப்பருப்பு
  2. 3/4கப் புழுங்கலரிசி
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1/2 டீஸ்பூன் மிளகு
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  7. 8 முந்திரி பருப்பு
  8. 1 துண்டு இஞ்சி
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1/4 டீஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் அரிசி சேர்த்து நன்கு அலம்பி 3 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிது உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி பொடித்த மிளகு மற்றும் சீரகம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்டு குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    சத்தம் அடங்கியதும் குக்கரை திறந்து வெந்த பொங்கலை கரண்டி வைத்து நன்கு மசித்து விடவும்

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு பொன்னிறமாக வறுத்து வேக வைத்த பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.சுவையான பொங்கல் ரெடி தேங்காய் சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

  4. 4

    பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசி உபயோகித்து இதுபோல் பொங்கல் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும். மிளகை இந்த மாதிரி பொடித்து சேர்த்தால் குழந்தைகளும் ஒதுக்கி வைக்காமல் சாப்பிடுவர் செரிமானத்துக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Nice...we r on the way to Singapore to taste your own way ven Pongal😃😃

Similar Recipes