தலப்பாகட்டி மட்டன் பிரியாணி(thalapakatti mutton biryani recipev in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

தலப்பாகட்டி மட்டன் பிரியாணி(thalapakatti mutton biryani recipev in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3மணி நேரம்
6பேர்
  1. 3/4கிலோ மட்டன்
  2. 3.5கப் சீரக சம்பா அரிசி
  3. மசாலா1:
  4. 2டேபிள் ஸ்பூன்( மல்லிவிதை
  5. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  6. 1/2டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  7. 1/2டேபிள் ஸ்பூன் மிளகு
  8. 1நட்சத்திர சோம்பு
  9. 1ஜாவித்ரி
  10. 1/2டேபிள் ஸ்பூன் கல்பாசி
  11. 2பிரியாணி இலை
  12. 4ஏலக்காய்
  13. 10கிராம்பு
  14. 8சிறிய துண்டு பட்டை)
  15. மசாலா2:
  16. 40(சின்ன வெங்காயம்
  17. 4மிளகாய்
  18. 1கைப்பிடி புதினா இலைகள்
  19. பாதி கைப்பிடி மல்லியிலை
  20. 2பெரிய பூண்டு
  21. 1பெரிய துண்டு இஞ்சி)
  22. 3தக்காளி அரைத்த விழுது
  23. 1.5ஸ்பூன் மிளகாய் தூள்
  24. 1/2கப் தயிர்
  25. பாதி எழுமிச்சைபழச்சாறு
  26. தேவையானஅளவு உப்பு
  27. 1பெரிய குழிகரண்டி அளவு கடலை எண்ணெய்
  28. 1 சிறிய குழிகரண்டி அளவு நெய்
  29. கடைசியாக சேர்க்க:
  30. 10புதினா இலைகள்
  31. 2ஸ்பூன் நெய்
  32. தயிர் பச்சடிக்கு:
  33. 2பாக்கெட் தயிர்
  34. 2பெரிய வெங்காயம்
  35. தேவையானஅளவு உப்பு
  36. சிறிதளவுமல்லித்தழை, நறுக்கியது

சமையல் குறிப்புகள்

3மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம்.

    (மசாலா 1-ல் மழைக் காலம்,ஆதலால் சில நிமிடங்கள் வாணலியில் இட்டு பின் அரைத்தால்,அரைக்க எளிது.வறுக்கத் தேவை இல்லை.)

    மசாலா1 மற்றும் மசாலா2-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தனித்தனியாக வைக்கவும்.

    மிக்ஸி கழுவிய தண்ணீரைத் தனியாக வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை, நீளமாக அரிந்து, தயிர் மற்றும் உப்பு,மல்லித்தழை சேரத்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில்,நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும்,மசாலா2 (வெங்காயம்,மிளகாய் அரைத்த விழுயது)சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கியதும், மிளகாய் தூள் மற்றும்,மசாலா1 மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

  4. 4

    இப்பொழுது மட்டன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும். சேர்த்து 7-10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.நன்றாக வதக்கினால் தான் கவுச்சி வாசம் போகும்.

  5. 5

    பின் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

    3.5 கப் பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசிக்கு 7கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    சிக்கன்,மட்டன்
    பிரியாணியாக இருந்தால் 1கப் குறைத்துக் கொள்ள வேண்டும். எனவே,6கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  6. 6

    இப்பொழுது,மிக்ஸி கழுவிய தண்ணீர் 1கப் சேர்த்து கொதித்ததும்,குக்கர் மூடி சிறுதீயில் வைத்து 5 விசில் விடகவேண்டும்.

    இந்த சமயத்தில் தான் அரிசி கழுவி ஊற விட வேண்டும். அடுப்பை அனைக்கும் போது அரிசி தண்ணீர் வடிகட்டவேண்டும்.

    மட்டன் குழம்புக்கு 6 விசில் வைப்பேன்.பிரியாணிக்கு 1விசில் குறைவாக வைக்கவும்.

    விசில் விட்டு,ஆவி அடங்குவதற்கு,குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும்.

  7. 7

    அல்லது
    மட்டன் தனியாக

    (மட்டன் துண்டுகளை
    குக்கரில் சேர்த்து அதனுடன்,2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1கப் தண்ணீர் விட்டு 5 விசில் வைக்கவும். வெந்ததும்,கிடைக்கும் தண்ணீரை அரிசி போட்டதும் ஊற்றும் தண்ணீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்)

    வேக வைத்து இந்த ஸ்டெப்பில் சேர்க்கவும்.

  8. 8

    பின்,குக்கர் திறந்து மீதமுள்ள 5கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,ஊறவிட்டு வடிகட்டி வைத்த அரிசி சேர்க்க வேண்டும்.கொதித்ததும்,உப்புகாரம் சரிபார்த்து,எலுமிச்சை சாறு சேர்த்து வேக விடவும்.

  9. 9

    10 நிமிடங்களில், அரைப் பததிற்கு மேல் வெந்துவிடும்.தண்ணீர் வற்றி,தண்ணீர் மற்றும் அரிசி சம அளவில் இருக்கும் போது நெய் மற்றும் சில புதினா இலைகள் தூவி தம் போடவும்.

  10. 10

    சிறிய அடுப்பில்,தோசைக் கல் வைத்து அதன் மேல் குக்கர் வைத்து மூடி,அதன் மேல் கனமான பொருள் வைக்கவும்.

  11. 11

    இந்நிலையில்,20 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.பின் அடுப்பை அணைத்து 15 நிமிடங்கள் அதிலேயே வைக்கவும்.

  12. 12

    பின்,திறந்தால்பிரியாணி உதிரியாக வெந்து வந்திருக்கும்.

    அவ்வளவு தான். சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes