மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#RD

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

#RD

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45-60 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 500கிராம் சீரக சம்பா அரிசி
  2. 500கிராம் மட்டன் துண்டுகள்
  3. 100 மிலி தயிர்
  4. 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது
  5. 4 பட்டை
  6. 8 இலவங்கம்
  7. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  8. 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1கைப்பிடியளவு கொத்தமல்லித்தழை, புதினா
  10. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  12. 125 மிலி எண்ணெய் +நெய்
  13. 200கிராம் பெரிய வெங்காயம் நீள வாக்கில் கட் செய்தது
  14. 200கிராம் தக்காளி பொடியாக கட் செய்தது
  15. தேவையானஅளவு உப்பு
  16. 2 பச்சை மிளகாய்
  17. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

45-60 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி 1/2மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் மட்டனைப் போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 75%வேகவைத்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்னர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

  4. 4

    தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 800 மிலி தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மூடி மிதமான தீயில் வைத்து 10
    நிமிடங்கள் வேக வைக்கவும்.

  5. 5

    அதே நேரம் அரிசியை உப்பு 1டேபிள் ஸ்பூன் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்

  6. 6

    அரிசியை மட்டன் கலவையில் போட்டு கலந்து தேவையெனில் சிறிது வடிகட்டி வைத்த நீர் சேர்த்து மூடி வெயிட்டான பொருள் வைத்து 25-30 நிமிடங்கள் தம் வைக்கவும். பின் அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes