சின்ன வெங்காய மோர்க்குழம்பு(mor kulambu recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

சின்ன வெங்காய மோர்க்குழம்பு(mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200ml கெட்டி தயிர்
  2. 15 பல் சின்ன வெங்காயம்
  3. 2 ஸ்பூன் துவரம் பருப்பு
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1 1/2 வத்தல்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  8. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. 1 ஸ்பூன் வெந்தயம், கடுகு
  10. 1 pinch பெருங்காயம்
  11. ஒருக் கொத்து கருவேப்பிலை
  12. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்ஸி ஜாரீல் 200 ml தயிர் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    தண்ணீர்ச் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் ஜாரீல் 2 ஸ்பூன் துவரம்பருப்பு 5 நிமிடம் ஊறவைத்ததை எடுத்துக் கொள்ளவும் பின் 1 துண்டு இஞ்சியை சிறிதாக நறுக்கிச் சேர்க்கவும் பின் 1 ஸ்பூன் சீரகம்ச் சேர்க்கவும்

  4. 4

    1 வத்தல்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் வத்தலுக்கு பதிலாக காரம் அதிகம் தேவைப்பட்டால் பச்சை மிளகாய்ச் சேர்க்கவும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் அரைத்து எடுத்த தயிருடன் துவரம்பருப்பு கலவையை சேர்த்துக் கொள்ளவும் பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும் இரண்டையும் கரைத்து விடவும்

  6. 6

    பின் கடாயில் தாளிப்பிற்காக 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் கடுகு, வெந்தயம் மற்றும் 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் பென்னிறமாகவும் ஒருக் கொத்து கருவேப்பில்லை 1 வத்தல்ச் சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் சின்ன வெங்காயம் 15 ஐ தட்டிச்சேர்க்கவும் பின் வதக்கவும் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்த தயிர் கலவையைச் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    தயிர் குழம்பில் ஊற்றியதும் உடனே வற்றி விடும் ஆனால் துவரம் பருப்பு கலவை அப்படியே அரைத்ததால் வேக வேண்டும் என்பதற்காக ஒருக் கொதி விடவேண்டும்

  9. 9

    பின் பரிமாறவும் மோர்க்குழம்பு தயார் முயற்சிக்கவும் என்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes