பருப்பு உருண்டை மோர்க்குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப் புளித்த தயிர்
  2. ஒரு கப் தேங்காய்த்துருவல் அல்லது நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  3. ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  6. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  7. இரண்டு பச்சை மிளகாய்
  8. 4 மிளகாய் வற்றல்
  9. அரை கப் துவரம் பருப்பு
  10. கால் கப் கடலைப்பருப்பு
  11. ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. சிறிதுகருவேப்பிலை
  13. தாளிக்க தேவையான தேங்காய் எண்ணெய்
  14. தேவையானஉப்பு
  15. மஞ்சள்தூள் வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம்
  16. ஒரு டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் சீரகம்,சிறிது கடுகு.

  2. 2

    முதலில் கடலைப்பருப்பு துவரம்பருப்பு இவைகளை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து மோர் குழம்பிற்கு கடலைப்பருப்பு கொத்தமல்லி விதை சீரகம் கடுகு இவைகளை தனியாக ஊற வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது ஊறிய பருப்புகளை மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை சிறிது சிறிய உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து மோர் குழம்பிற்கு ஊறவைத்தவைகளை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மோர் குழம்பிற்கு அரைத்த விழுதை போட்டு தயிரை நன்றாக கலந்து வைத்துக் கொண்டு அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  6. 6

    இப்பொழுது வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் மெதுவாகப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு பொங்கி வரும் பொழுது தேங்காய் எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
உங்கள் முகத்தில் புன்சிரிப்பு உண்டாக்க தீர்மானித்தேன், quoting Mahi. உருண்டையில் து. பருப்பு சேர்க்கவில்லை . இந்த ஊரில் மோர் திரிந்துவிடும் அதனால் மோருடன் வேகவைத்த ப. பருப்பு மோர் குழம்பு செய்யும் பொழுது சேர்ப்பேன். ஏறத்தாழ உங்கள் மோர் குழம்பு போல

Similar Recipes