வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்
இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021

வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)

என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்
இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 1/2 கப் கோதுமை மாவு
  2. 3டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  3. 3/4 கப் வெல்லம்
  4. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  7. இரண்டு டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி
  8. 10முந்திரிப் பருப்புகள் பொடியாக நறுக்கியது
  9. 10வால்நெட் பொடியாக நறுக்கியது
  10. 10கருப்பு பேரிச்சம்பழம் பொடியாக நறுக்கியது
  11. 10பிஸ்தா பருப்புகள் பொடியாக நறுக்கியது
  12. 5உலர்ந்த திராட்சை பொடியாக நறுக்கியது
  13. கால் டேபிள்ஸ்பூன் பட்டை தூள்
  14. அரைக் கப் ரீபைன்ட் சன் பிளவர் ஆயில்
  15. கால் கப் தயிர்
  16. அரைக்கப் காய்ச்சி ஆற வைத்த பால்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    படத்தில் காட்டியவாறு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு அகலமான பாத்திரத்தில் நீ என்னை தயிர் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இதனுடன் வெல்லத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    இதனை மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்துக் கொண்டு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதன்மேல் சல்லடை வைத்து கோதுமை மாவு கோக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா பட்டைத்தூள் சேர்த்து சலித்துக் கலந்து கொள்ளவும்.இது சிறிது கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் கலந்து கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது கேக் செய்யும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்கு தடவி அதன் மேல் பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றிவும். நட்ஸ் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் பேரீச்சம்பழங்களை 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு தூவி நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    இதனை கலந்துள்ள கலவைகள் நன்கு சேர்த்து கிளறி மீதமுள்ள நச்சுக்களை தூவி அலங்கரித்து கொள்ளவும். இப்பொழுது பிரிட் செய்துள்ள கடையில் உள்ளே வைத்து மூடி 45 முதல் 50 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேக விடவும்.

  5. 5

    இப்பொழுது கேக் வெந்ததும் நன்கு ஆறவிட்டு பட்டர் பேப்பரை பிரித்து எடுத்தாள் சுவையான மற்றும் ஆரோக்கியமான வீட் ஜகரி நட்டி கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes