இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)

தேவி
தேவி @cook_27496537

கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.

#GRAND1
#christmas

இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)

கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.

#GRAND1
#christmas

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பரிமாறுவது
  1. 1/4 கப்முந்திரி
  2. 1/4 கப்கருப்பு திராட்சை
  3. 1/4 கப்நறுக்கிய பாதம்
  4. 1/4 கப்உலர் திராட்சை
  5. 1/4 கப்சிவப்பு டூட்டி ப்ருட்டீ
  6. 1/4 கப்பச்சை டூட்டி ப்ருட்டீ
  7. 3 மேஜைக்கரண்டிஉலர் செர்ரி
  8. 3 மேஜைக்கரண்டிஉலர் பேரீட்சை
  9. 3/4 கப்ஆரஞ்சு பழச்சாறு
  10. 1 கப்வெதுவெதுப்பான பால்
  11. 1மேஜைக்கரண்டிஎலுமிச்சை பழச்சாறு
  12. 1/2 + 1/3 கப்சர்க்கரை
  13. 1/2ஜாதிக்காய்
  14. 3ஏலக்காய்
  15. 3பட்டை
  16. 4லவங்கம்
  17. 1/2 இன்ச்சுக்கு
  18. 1/4 கப்தண்ணீர்
  19. 2 கப்மைதா
  20. 1 தேக்கரண்டிபேக்கிங் பவுடர்
  21. 1/4 தேக்கரண்டிபேக்கிங் சோடா
  22. 1/4 தேக்கரண்டிஉப்பு
  23. 2 மேஜைக்கரண்டிகோகோ பவுடர்
  24. 1/2 கப்சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
  25. 1 தேக்கரண்டிவெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் நம்மிடம் உள்ள உலர் பழங்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    இதில் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஊர வைக்க வேண்டும். நீங்கள் 8 மணி நேரம் வரை ஊற வைத்து கொண்டாள் மிகவும் நல்லது.

  3. 3

    உலர் பழங்கள் நன்கு ஊறியதும். ஒரு கப் அளவு வெதுவெதுப்பான பாலில் ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    மிக்ஸியில் 1/3 கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஜாதிக்காய், பட்டை, ஏலக்காய், லவங்கம், சுக்கு சேர்த்து நன்கு பவுடர் செய்து கொள்ளவும்.

  5. 5

    கடாயில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் உருக்கவும். நன்கு உருகி அடர் பிரவுன் நிறம் வரும் வரை காத்திருக்கவும்

  6. 6

    நிறம் அடர் பிரவுன் வந்ததும் அடுப்பை அணைத்து அதனுடன் 1/4 தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தனியே எடுத்து வைக்கவும்.

  7. 7

    ஓரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு சேர்த்த பாலை சேர்க்கவும்

  8. 8

    அதனுடன் 1/2 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கவும்

  9. 9

    இதனுடன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  10. 10

    பின் ஒரு சலிப்பில் மைதா மாவு, சர்க்கரை பொடி செய்தது, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து நன்கு சலித்து கொள்ளவும்.

  11. 11

    இதை மென்மையாக கலந்து கொள்ளவும்

  12. 12

    இதனுடன் நாம் உருக்கி வைத்துள்ள சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் மென்மையாக கலந்து விடவும்.

  13. 13

    நன்கு கலந்ததும் இதனுடன் நாம் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள உலர் பழங்களை பழச்சாறுடனே இதில் சேர்த்து மீண்டும் மென்மையாக கலந்து விடவும்

  14. 14

    இப்போது நாம் செய்த கேக் கலவையை பட்டர் பேப்பர் வைத்த கேக் பாத்திரத்தில் சேர்க்கவும்

  15. 15

    நான்கில் இருந்து ஐந்து முறை கேக் பத்திரத்தை தட்டவும். இப்படி செய்வதன் மூலம் காற்று குமிழ்களை நீக்கலாம்.

  16. 16

    கலவையின் மேலே கருப்பு திராட்சை, முந்திரி, டூட்டி ப்ரூடி போன்ற உலர் பழங்களை சேர்க்கலாம்.

  17. 17

    இட்லி பாத்திரத்தில் உப்பு பரப்பி ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடம் மிதமான தீயில் சூடு படுத்தவும்

  18. 18

    சூடு செய்த இட்லி பாத்திரத்தில் கேக் கலவையை வைத்து மூடி 15 நிமிடம் மிதமான தீயிலும் 40 நிமிடங்கள் குறைவான தீயிலும் வைத்து வேகவிடவும்.

  19. 19

    55 நிமிடங்கள் கழித்து திறந்து வெந்து விட்டதா என்று ஒரு குச்சி வைத்து குத்தி பார்க்கவும். குத்தி பார்க்கும் போது குச்சியில் ஒட்டாமல் வந்தால் கேக் நன்கு வேந்துவிட்டது.

  20. 20

    கேக்கை இட்லி பாத்திரத்திலிருந்து எடுத்து 3 மணி நேரம் நன்கு ஆற வைக்கவும்.

  21. 21

    3 மணி நேரம் கழித்து கேக்கை வெட்டி பரிமாறலாம். நீங்கள் 6 லிருந்து 8 மணி நேரம் கழித்து உண்ணும் போது இன்னும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தேவி
தேவி @cook_27496537
அன்று

Similar Recipes