கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 100 கிராம்கடலை பருப்பு
  2. 6 பல்வெள்ளைப் பூண்டு
  3. 2நன்கு பழுத்த தக்காளி
  4. ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 15சின்ன வெங்காயம்
  6. இரண்டு ஸ்பூன்சாம்பார் தூள்
  7. அரை டீஸ்பூன்பெருங்காயம்
  8. இரண்டுகாய்ந்த மிளகாய்
  9. ஒரு டீஸ்பூன்கடுகு உளுந்தம் பருப்பு
  10. கருவேப்பிலை கொத்தமல்லி
  11. ஒரு டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை நன்கு கழுவி அதனை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    அதன் பின் குக்கரில் கடலை பருப்பு 6 பல் பூண்டு இரண்டு தக்காளி மஞ்சத்தூள் சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கி விட வேண்டும்

  3. 3

    பின்பு வேக வைத்த கடலை பருப்பை நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பின் கடாயில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு அதில் கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை பூண்டு கொத்தமல்லி சேர்த்து வதக்கவேண்டும் பின்பு அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும் அதன் பிறகு நம் வேக வைத்த கடலைப்பருப்பை கலவையை அத்துடன் சேர்க்க வேண்டும் பின் அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும் பின் கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி விட வேண்டும் இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சாம்பார் ரெடி இதனை நான் இட்லி தோசைக்கு பயன்படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ் (2)

Cook Today
Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
அன்று

Similar Recipes