சின்ன வெங்காய சாம்பார்(onion sambar recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

சின்ன வெங்காய சாம்பார்(onion sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் சின்ன வெங்காயம்
  2. 4 பல் பூண்டு
  3. 2 ஸ்பூன் எண்ணெய்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 2 மேஜை கரண்டி சாம்பார் தூள்
  6. 1 நாட்டு தக்காளி
  7. 2 ஸ்பூன் புளிக்கரைசல்
  8. 1 சிறிய துண்டு வெள்ளம்
  9. தாளிப்பதற்கு
  10. கடுகு
  11. கருவேப்பிலை
  12. சீரகம்
  13. 2 காய்ந்த மிளகாய்
  14. 1/4 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும் இதில் உரித்து வைத்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழுசாக சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். கூடவே பச்சை மிளகாய் சேர்க்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் உப்பு நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து தக்காளி மசிய வதக்கவும்.

  2. 2

    இதில் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புலியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக சாம்பார் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, வெல்லம் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடு ஏறியதும் கடுகு கருவேப்பிலை சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான இந்த சாம்பார் அனைத்து விதை டிபன் வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rani N
Rani N @Nagarani
அன்று

Similar Recipes