முட்டை கறி(egg curry recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#made3
முட்டை
காலை உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 பெரியதுவெங்காயம் -
  2. 1பச்சை மிளகாய் -
  3. 1 பெரியதுதக்காளி -
  4. சிறிதளவுகறிவேப்பிலை -
  5. ¼ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  6. ¾ தேக்கரண்டிசோம்பு தூள் -
  7. 1 தேக்கரண்டிகறி மசாலா தூள் -
  8. ¼ கப்தேங்காய் பால் -
  9. தேவையான அளவுஉப்பு -
  10. 2 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய் -
  11. ¼ தேக்கரண்டிமிளகு தூள் -

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஓர் அகன்ற பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலாக்கள் சேர்க்கவும்.

  2. 2

    முதலில் மஞ்சள் தூள், சோம்பு தூள், கறி மசாலா தூள் சேர்த்து பின்பு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் தேங்காய் பால் தண்ணி பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    தேங்காய் தண்ணி பால் சேர்த்து கொதிக்கும் போது முட்டைகளை ஒவ்வொன்றாக கொத்தி ஊற்றி மூடி வைத்து விடவும்.

  4. 4

    முட்டை வெந்ததும் தேங்காய் பால் கட்டி பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் ¼ தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்கி விடவும். சுவையான ஆரோக்கியமான முட்டை கறி தயார்.இதை ஆப்பம் மற்றும் வெள்ளை அடையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes