தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை.

தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)

மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஐந்து பேர்
  1. கால் கிலோதக்காளி
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்-
  4. கால் கப்தேங்காய்த் துருவல்
  5. அரைடீஸ்பூன்மஞ்சள் தூள்
  6. ஒரு டீஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
  7. தாளிக்க கடுகு கறிவேப்பிலை
  8. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின்னர் மஞ்சள்தூள்,குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தக்காளி பச்சடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes