வெண்டைக்காய் தக்காளி பச்சடி

சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை நன்றாக வதக்கி வைக்கவும்.
- 5
அதே கடாயில் கூட கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு பொட்டியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 7
தக்காளி வதங்கியதும் மஞ்சள், மிளகாய்,ஜீரக தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.மஸாலா வதங்கியதும், வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
- 8
புளியை சிறிது தண்ணீரில் கலக்கி பிழிந்து இதில் ஊற்றி பச்சை வாசனை மாறும் வரை கொதிக்க விடவும்.
- 9
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 10
இதனுடன் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
- 11
கொதித்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து கிளறி இறக்கவும்.
- 12
அருமையான சுவையில் வெண்டைக்காய் தக்காளி பச்சடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
-
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
-
-
135.பச்சடி
பச்சடி ஒரு சுவையான செய்முறையாகும், அது அரிசிப்பருப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.இது வழக்கமாக வெல்லரிக்கா (சாம்பர் குரூப்பிற்கான மலையாளம்) கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஆனால் அதைச் சேர்த்து நீங்கள் பூசணி, வெண்டைக்காய் மற்றும் தக்காளி போன்ற மற்ற காய்கறிகள் சேர்க்கலாம். Meenakshy Ramachandran -
-
தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை. Lathamithra -
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
-
-
-
More Recipes
கமெண்ட்