Andhra special  usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#Ap
ஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை.

Andhra special  usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)

#Ap
ஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 50 கிராம் நெல்லிக்காய்
  2. 2டீ ஸ்பூன் மல்லி
  3. 1டீ ஸ்பூன் ஜீரகம்
  4. 1டீ ஸ்பூன் கடுகு
  5. 1டீ ஸ்பூன் வெந்தயம்
  6. 3 காஞ்ச மிளகாய்
  7. 3பச்சை மிளகாய்
  8. 4 பூண்டு
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டை இல்லாமல் சிறிதாக நறுக்கி கொள்ளவும். தேவையான பொருள்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஓரு காடாய் சூடானதும் அதில் எண்ணெய் விட்டு மல்லி, வெந்தயம், கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். பின்பு அதில் காஞ்ச மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதை சூடு ஆற வைக்கவும்

  3. 3

    அதை கடாயில் நறுக்கிய நெல்லிக்காய், மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அதையும் சூடு ஆற வைக்கவும்.

  4. 4

    சூடு ஆறியதும் ஒரு மிக்ஸில் சேர்த்து அரைத்து கொள்ளவும். தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

  5. 5

    ஒரு காடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  6. 6

    அரைத்த விழுதை உடன் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

  7. 7

    சுவையான உசிரிக்காயா பச்சடி தயார்.

  8. 8

    இதை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து 5 நாள் வரை பயன்படுத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes