முருங்கை காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை காயை நறுக்கி கொள்ளவும் பருப்பை களைந்து கழுவி தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்
- 2
பருப்பு விரிந்து மெத்தென்று வேகவைத்து இறக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் கூட தனியாத்தூள் சீரகத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
பின் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி முருங்கை காயை வேகவிடவும் காய் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
பின் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கை காய் சாம்பார் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
-
-
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம். Laxmi Kailash -
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
-
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
-
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani
More Recipes
கமெண்ட்