தேங்காய் சுடும் நோம்பி ஆடி 1(thengai suttathu recipe in tamil)

# சேலத்தின் மிக முக்கியமான பண்டிகை இந்த தேங்காய் சுடும் பண்டிகை. ஆடி மாதம் பிறந்த அன்று இந்த பண்டிகை கொண்டாடுவோம் ஆடி வந்து விட்டாலே சேலம் மிகவும் களைகட்டி விடும். எல்லா முக்கியமான பகுதிகளிலும் அந்தந்த மாரியம்மன் கோவிலில் இந்த 30 நாளும் மிகவும் விசேஷமான பூஜைகள் நடக்கும். முதலில் கொடி மரத்திற்கு பூஜை செய்வார்கள். வரிசையாக பூச்சாட்டுகள், கம்பம் நடுதல் , கிராம சாந்தி,சக்தி அழைத்தல், உருள் போடுதல், பொங்கல் வைத்தல் அலகு குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் கும்ப பூஜை (அவரவர் வீட்டில்) கடைசியாக தேர் இழுத்தல் போன்றவை நடைபெறும். சில கோயில்களின் பூமிதித்தலும் உண்டு. கடைசியாக வண்டி வேடிக்கை என்று மிகவும் விசேஷமான கொண்டாட்டம் இருக்கும். பிறகு சத்தாபரணம் நடைபெற்று அதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழா உடன் பண்டிகை முடிவடையும். ஆடி. முதல் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஆரம்பமாகும்.
தேங்காய் சுடும் நோம்பி ஆடி 1(thengai suttathu recipe in tamil)
# சேலத்தின் மிக முக்கியமான பண்டிகை இந்த தேங்காய் சுடும் பண்டிகை. ஆடி மாதம் பிறந்த அன்று இந்த பண்டிகை கொண்டாடுவோம் ஆடி வந்து விட்டாலே சேலம் மிகவும் களைகட்டி விடும். எல்லா முக்கியமான பகுதிகளிலும் அந்தந்த மாரியம்மன் கோவிலில் இந்த 30 நாளும் மிகவும் விசேஷமான பூஜைகள் நடக்கும். முதலில் கொடி மரத்திற்கு பூஜை செய்வார்கள். வரிசையாக பூச்சாட்டுகள், கம்பம் நடுதல் , கிராம சாந்தி,சக்தி அழைத்தல், உருள் போடுதல், பொங்கல் வைத்தல் அலகு குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் கும்ப பூஜை (அவரவர் வீட்டில்) கடைசியாக தேர் இழுத்தல் போன்றவை நடைபெறும். சில கோயில்களின் பூமிதித்தலும் உண்டு. கடைசியாக வண்டி வேடிக்கை என்று மிகவும் விசேஷமான கொண்டாட்டம் இருக்கும். பிறகு சத்தாபரணம் நடைபெற்று அதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழா உடன் பண்டிகை முடிவடையும். ஆடி. முதல் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஆரம்பமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும் கீழ்கண்ட படத்தில் உள்ளது. இரண்டு இளம் தேங்காய்களையும் பீளர் வைத்து சுத்தமாக முடியை எடுத்து விடவும். குடிமையை பிய்த்து விடவும். அந்த காலத்தில் நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது சொரசொரப்பான கல்லில் மொக்கு த்தூள் அல்லது செங்கலை நுணுக்கி அதில் தேங்காய் தேய்த்து வழ வழப்பாக்குவோம். பிள்ளைகள் செய்வதில்லை அதனால் கத்திக்கொண்டு சுரண்டி அல்லது இதுபோல் பீலர் வைத்து செய்து விடுகிறோம். பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- 2
எள்ளையும் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் ஆற விட்டு இதனுடன் அவல், பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக ஓட்டிக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக்கொண்டு நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும்.தேங்காயில் சேர்க்கப் போகும் பூரணம் ரெடி. தேங்காயின் மூன்று கண்களில் பெரும் துளையாக இருக்கும் பக்கம் ஒரு கம்பி கொண்டு அல்லது பணியாரம் சுடும் கம்பியால் ஓட்டை போட்டுக் கொள்ளவும். ஓட்டையை சிறிது பெரிதாக்கிக் கொள்ளவும். அப்போதுதான் பூரணம் உள்ளே நிரப்பி குச்சி சொருக முடியும
- 3
தேங்காய் துளையிட்ட பிறகு அதிலுள்ள தேங்காய் தண்ணீரில் பாதி மட்டும் ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.மீதி தண்ணீரை தேங்காயிலே இருக்க விடவும்.. பிறகு கைகளை படத்தில் காட்டியுள்ளபடி வைத்துக் கொண்டு பூரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஒரு பணியார கம்பி கொண்டு குத்தி உள்ளே தள்ளி விடவும். நிரம்பி விட்டால் தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே தெரியும். இப்போது பூரணம் போடுவதை நிறுத்திவிட்டு மீதி தேங்காய் தண்ணீரை அதில் சேர்த்து குச்சியின் கூர்மையான பக்கத்தை சொருகி நன்கு குச்சியை டைட் செய்து விடவும்.
- 4
பிறகு இரண்டு தேங்காய் க்கும், குச்சிக்கும் மஞ்சள் தடவி குங்குமம் வைக்கவும். ஸ்டவ்வில் குச்சியுடன் சேர்த்து படத்தில் காட்டியுள்ள படி மிதமான தீயில் தேங்காயை சுடவும். ஒருமுறை நிமிர்த்திய வாரும், பிறகு சுற்றியும் காட்டி நிதானமாக குச்சி கழண்டு வராமல் தேங்காயை சுட வேண்டும். தேங்காயில் நுனி பாகம் ஓடு உடைந்து தனியாக வரும். தேங்காய் வெந்து விட்டதால அடுப்பை நிறுத்தி விடவும். இந்த குச்சி அப்படியே பிள்ளையார் படத்தின் முன்போ பிள்ளையாரின் முன்போ வைத்து தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி கும்பிடவும்.
- 5
ஆரிய பிறகு ஓட்டை தனியாக எடுத்துவிட்டு இரண்டாக தேங்காயை கத்தியால் அறுத்துக் கொள்ளலாம். படத்தில் காட்டி உள்ளபடி. பூரணம் நிரம்பி பார்ப்பதற்கே அழகாகவும் சாப்பிடவும் தூண்டும். பூரணம் நிறைவாக நிரம்பி வந்தால் மிகவும் நல்லது. பிறகு இதை மறுபடியும் பிள்ளையாரிடம் வைத்து கும்பிட்டு விட்டு சாப்பிட எடுத்துக் கொள்ளலாம் இளம் தேங்காய் உடன் பூரணத்தை வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
- 6
இது சேலம் மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும் இதன் தாத்பரியம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஆடி பிறந்தவுடன் சேலம் தில் மற்ற பண்டிகைகள் மாதம் மாதம் வரிசையாக வந்துவிடும். சிறுவர்கள் கொண்டாடும் பண்டிகை இது சில சிறுவர்கள் பிள்ளையார் கோயிலில் கொண்டு சென்று வைத்து தேங்காயை கும்பிடுவார்கள். பூரணம் இறக்கும் பொழுது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும் நிதானமாக கம்பி கொண்டு குத்தி விட்டு பூரணத்தை நன்கு நிரப்ப வேண்டும். மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூரணம் இது.
- 7
இங்கு குச்சி பண்டிகை அன்று மார்க்கெட்டில் நுனி சிவி கிடைக்கும்.உங்கள் ஊரில் அது கிடைக்க வில்லை என்றால் தாங்களே இது போன்ற ஒரு குச்சியை எடுத்து நுனியை கூர்மையாக சீவி கொள்ளவும் தேங்காய் கண்களில் சொருகும் அளவிற்கு. சன்னமாக சீவி விட வேண்டாம்.
Top Search in
Similar Recipes
-
-
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
நம் உணவில் கருப்பு எள் அதிகம் சேர்க்க வேண்டும் அந்த வகையில் சட்னியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் இந்த முறையில் சட்னி இட்லிக்கு மிகவும் ருசியை தரும் கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் Banumathi K -
5 இன் 1 ஸ்வீட் (5 in 1 sweet recipe in Tamil)
#deepavali #kids2ஈசியாக 5 விதமான ஸ்வீட் ஒரே மாவில் தயாரித்து விடலாம். செம்பியன் -
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது. Jegadhambal N -
Panjakajjaya Karnataka கோவில் பிரசாதம் (Panjakajjaya recipe in tamil)
#Karnataka SPL கோவில் பிரசாதம்.மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த கர்நாடகா ஸ்பெஷல் கோவில் பிரசாதத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
தம்பிட்டு/ Tambittu (Tambittu recipe in tamil)
#ap தம்பிட்டு என்பது சிவராத்திரிக்கு செய்ய மாவாகும்.இதில் பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இது கலோரி குறைவாக இருப்பதால் இதை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். Gayathri Vijay Anand -
-
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
விரத ஸ்பெஷல், *தேங்காய் பூரணம்*(viratha special thengai pooranam recipe in tamil)
#VTவரலக்ஷ்மி விரதம் அன்று தேங்காய் பூரணம் மிகவும் முக்கியமானது.அதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
உசிலி பொடி(Usili podi recipe in tamil)
#powder உசிலி வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாவிதமான காயிலும் செய்வார்கள் அதற்கு பருப்பு ஊறவைத்து அரைத்து செய்ய நிறைய நேரம் ஆகும் இந்த பொடி சீக்கிரம் சுவையாக செய்து விடலாம் Chitra Kumar -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
தேங்காய் திரட்டுப் பால் (Thengai Thirattu PAal Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பிஸ் Natchiyar Sivasailam -
-
*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)
150 வது ரெசிபி,எனது 150 வது ரெசிபி இது.மார்கழி மாதம் பிறந்தால், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்வது வழக்கம்.நானும் மார்கழி மாதம் பிறந்த அன்று,* சர்க்கரை பொங்கல்* செய்தேன்.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட Santhi Chowthri -
-
சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)
கர்நாடகாவில் நவராதரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்கிறார்கள். பாட்டி சொஜ்ஜியப்பம் என்று சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ருசித்திருக்கிறேன். இன்றுதான் முதலில் செய்கிறேன் நல்ல ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (12)