தம்பிட்டு/ Tambittu (Tambittu recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#ap தம்பிட்டு என்பது சிவராத்திரிக்கு செய்ய மாவாகும்.இதில் பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இது கலோரி குறைவாக இருப்பதால் இதை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

தம்பிட்டு/ Tambittu (Tambittu recipe in tamil)

#ap தம்பிட்டு என்பது சிவராத்திரிக்கு செய்ய மாவாகும்.இதில் பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இது கலோரி குறைவாக இருப்பதால் இதை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2-3 பரிமாறுவது
  1. 100 கிராம்பச்சரிசி
  2. 100 கிராம்நாட்டு சர்க்கரை
  3. 50 கிராம்பொட்டு கடலை
  4. 50 கிராம்நடக்கடலை
  5. 2 டீஸ்பூன்வெள்ளை எள்ளு
  6. 1\2 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலில் பச்சரிசியை நன்றாக வறுத்து கொள்ளவும்.அதை தட்டில் கொட்டி ஆரவைத்து கொள்ளவும்.

  2. 2

    அதேபோல் பொட்டு கடலையும் பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.

  3. 3

    நடக்கடலையும் பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.எள்ளையும் ஆற வைத்து கொள்ளவும்.

  4. 4

    நாட்டு சர்க்கரை வானலியில் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு கொதிக்க விட்டு இறக்கவும்.

  5. 5

    ஆறியதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

  6. 6

    அரைத்த பொடியை அகலமான பாத்திரத்தில் கொட்டி சர்க்கரை பாகு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  7. 7

    பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து பரிமாறவும்.சுவையான தம்பிட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes