எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் - துவரம்பருப்பு
  2. கடலைப்பருப்பு - 1 கப்
  3. சீரகம் - 1 கப்
  4. மல்லி (தனியா) - 2 கப்
  5. மிளகு - 5 டீஸ்பூன்
  6. வெந்தயம் - 2 டீஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் - 2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் வேறும் சட்டியில் கடலைப்பருப்பை வறுக்கவும். 2 நிமிடம் ஆனதும் துவரம் பருப்பைச் சேர்த்து இளம் சிவப்பாக மாறும் வரை வறுக்கவும்.

  2. 2

    3 நிமிடம் கழித்து மேலே கொடுத்துள்ளவற்றில், இருக்கும் மற்ற அனைத்து பொருட்களையும், வறுத்தவற்றோடு ஒன்றாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும். எல்லாம் இளம் சிவப்பு நிறத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
    அடுப்பை சிறு தீயில் வைத்து வறுக்கவும்.

  3. 3

    பிறகு இதை மிக்ஸியில்போட்டு பொடியாக்கி கொண்டால், வீட்டிலேயே தயாரித்த சுவையான ரசப்பொடி ரெடி.

  4. 4

    ரசம் வைக்கும் போது பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், புளி, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, வெள்ளம் சுண்டைக்காய் அளவு,  கருவேப்பிலை, கொத்தமல்லி  சேர்த்து பிசைந்து 1 கப்  தண்ணீர் சேர்த்து கொதித்ததும், ரசக்கலவையில் இந்த பொடியைச் சேர்த்து கலந்து பிறகு தாளிப்பு சேர்த்து நுரை பொங்கி வர அடுப்பை அணைத்து வெந்தயப்பெடி சேர்த்து பரிமாறவும்.

  5. 5

    ஒரு ஃபாயில் கவரில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahi Venugopal
Mahi Venugopal @cook_16179841
அன்று
Coimbatore
finished my Masters in Mathematics.love to cook especially kids recipes.mom for twin , food blogger .
மேலும் படிக்க

Similar Recipes