அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#மழைக்கால உணவுகள்

அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்

#மழைக்கால உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 கப்ப்ரௌன் அவல்
  2. 1/2 கப்வெல்லம்
  3. 1/2 கப்துருவிய தேங்காய்
  4. 1/4 டீ ஸ்பூன்ஏலக்காய் பொடி
  5. 1/4 டீ ஸ்பூன்சுக்கு பொடி
  6. 2 டேபிள் ஸ்பூன்பொட்டு கடலை
  7. 2 டீ ஸ்பூன்நெய்
  8. 1/4 கப்தண்ணீர்
  9. 4பாதாம் பருப்பு- துருவிக் கொள்ளவும்
  10. 4பிஸ்தா- துருவிக் கொள்ளவும்
  11. 6முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் உருக்கவும்.

  2. 2

    நன்கு உருகியதும் வடிகட்டி மீண்டும் சூடாக்கி பாகு பததிற்கு காய்ச்சவும்.

  3. 3

    பாகு பததிற்கு(சிறிது எடுத்து கையில் தொட்டு பார்க்கும் போது நன்கு ஒட்ட வேண்டும்) வந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு அவல், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து நன்கு சுருள கிளறவும்.

  5. 5

    நன்கு சுருண்டதும், அடுப்பில் இருந்து இறக்கவும்.

  6. 6

    பின்பு இன்னொரு பாத்திரத்தில், சிறிது நெய் சேர்த்து சூடான பின் பொட்டு கடலை,
    பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து சமைத்த அவலுடன் சேர்க்கவும்.

  7. 7

    சூடாக வாழைப்பழத் துண்டுகளுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes