எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 5வேக வைத்த முட்டை
  2. 1 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  3. 1/4 டீ ஸ்பூன்கடுகு
  4. ஒரு துண்டுபட்டை
  5. 3ஏலக்காய்
  6. 2கிராம்பு
  7. 5மிளகு
  8. 2பச்சை மிளகாய்
  9. 1 டீஸ்பூன்துருவிய இஞ்சி
  10. -7பூண்டு பற்கள்- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  11. ஒரு கொத்துகருலேப்பில்லை
  12. 2பெரிய வெங்காயம்
  13. 2தக்காளி
  14. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  15. 1/2 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  16. 1 டேபிள் ஸ்பூன்மல்லித் தூள்
  17. 1/4 கப்புளி கரைசல்
  18. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  19. தேவையான அளவுஉப்பு
  20. 1/2 கப்கெட்டியான தேங்காய் பால்
  21. 1/2 கப்தண்ணியான தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு பச்சை மிளகாய், கருலேப்பில்லை, துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  6. 6

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.

  7. 7

    புளி கரைசல் மற்றும் தண்ணியான தேங்காய் பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.

  8. 8

    சிறிது கொதி வந்ததும் கெட்டியானதேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  9. 9

    பின்பு வேகவைத்த முட்டைகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes