எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்
  1. 1 கப் கேரட் துருவல்
  2. 2 கப் பால்
  3. 1 கப் சர்க்கரை
  4. 1/4 கப் நெய்
  5. 10 முந்திரி
  6. 10 பாதாம்
  7. 1/2 கப் மில்க்மெயின்ட்
  8. சிறிதுரோஸ் வாட்டர்
  9. சில துளிவெனிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கேரட்டை நன்றாக துருவி வைக்கவும்

  2. 2

    வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின் பால் விட்டு நன்கு வேக வைக்கவும்

  4. 4

    முந்திரி பாதாம் ஆகியவற்றை ஊறவைத்து பின் சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

  5. 5

    பின் கேரட் நன்கு வெந்து பால் வற்றியதும் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் விழுது சேர்த்து கிளறவும்

  6. 6

    பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  7. 7

    பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    சற்று நேரத்தில் சேர்ந்தால் போல் வரும் போது சூடான நெய் விட்டு நன்கு கிளறவும்

  9. 9

    ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் மற்றும் வெனிலா எசென்ஸ் சில துளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes