தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250+50 கிராம் டெசிகேடட் கோகனட் பவுடர்
  2. 1/4 கப் பால் பவுடர்
  3. 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 100 மில்லி மில்க்மெயின்ட்
  5. 3/4 கப் பால்
  6. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  7. ரோஸ் வாட்டர் சில துளிகள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் 50 கிராம் டெசிகேடட் கோகனட் பவுடர் ஐ தனியாக எடுத்து வைக்கவும்

  2. 2

    நான்ஸ்டிக் பேனில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும்

  3. 3

    பின் காய்ச்சிய பால் ஐ ஊற்றி பால் சுண்டும் வரை கிளறவும்

  4. 4

    பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  5. 5

    பின் பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    எல்லாம் சேர்ந்து வரும் வரை கிளறவும் பின் நெய் விட்டு ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்

  7. 7

    உடனடியாக ஒரு தட்டில் மாற்றவும் நிறம் மாறாமல் இருக்கும் சற்று ஆறியதும் கைப்பொறுக்கும் சூட்டில் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  8. 8

    பின் எடுத்து வைத்துள்ள டெசிகேடட் கோகனட் பவுடரில் புரட்டி வைக்கவும்

  9. 9

    சுவையான கோகனட் லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes