உருளைக்கிழங்கு இறால் படகுகள்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 (பெரியது)உருளைக்கிழங்கு
  2. 100 கிராம்இறால்
  3. 1/2 கப்துருவிய பனீர்
  4. 1/4 கப்துருவிய சீஸ்
  5. 1/2 கப்நறுக்கிய வெங்காயம்
  6. 1 மேசைக்கரண்டிமிளகாய் தூள்
  7. 2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  8. 1 தேக்கரண்டிபாப்ரிகா
  9. 1 மேசைக்கரண்டிநறுக்கிய மல்லித்தழை
  10. 1/4 கப்மயோனைஸ்
  11. 2 மேசைக்கரண்டிதக்காளி சாஸ்
  12. சுவைக்கேற்பஉப்பு
  13. பொரிக்கஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு அவித்து இரு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.

  2. 2

    சூடு ஆறியதும் கிழங்கில் நடுவே கரண்டியால் எடுத்து படகு போல் பள்ளம் ஆக்கவும்.

  3. 3

    இராலை சுத்தப்படுத்தி மிளகாய்த்தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ் பனீருடன் இரால் மிளகுத்தூள் பாப்ரிகா மயோனைஸ் தக்காளி சாஸ் உப்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    பின்பு அதோடு கிழங்கிலிருந்து எடுத்ததை நன்கு மசித்து சேர்க்கவும்.

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு படகை பொறித்து எடுக்கவும்.

  7. 7

    பிறகு சூடு ஆறியதும் கிழங்கினுள் சீஸ் இரால் கலவையை வைத்து துருவிய சீஸை தூவவும்

  8. 8

    ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் சீஸ் உருகும் வரை பத்து நிமிடங்கள் பேக் செய்து மேலே சாஸ் ஊற்றி சாப்பிடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes