பொடி கத்திரிக்காய் வறுவல்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#பொரியல்உணவுகள்
மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10  நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஐந்துசிறிய கத்தரிக்காய்
  2. ஒரு தேக்கரண்டிகடுகு
  3. ஒரு தேக்கரண்டிகடலைப்பருப்பு
  4. ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு
  5. ஒரு கீற்றுகருவேப்பிலை
  6. தேக்கரண்டிமஞ்சள் தூள் கால்
  7. 4 மேஜைக்கரண்டிஎண்ணை
  8. தேவையான அளவுஉப்பு
  9. பொடி மசாலா அரைப்பதற்கு :
  10. 3 மேஜைக்கரண்டிகடலைப்பருப்பு
  11. ஒரு தேக்கரண்டிமல்லி
  12. ஒரு மேஜைக்கரண்டிவேர்க்கடலை
  13. 2 மேஜைக்கரண்டிவெள்ளை எள்
  14. 4வர மிளகாய்
  15. அரை தேக்கரண்டிமிளகு
  16. சிறிய துண்டுபுளி
  17. கால் கப்துறுவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

10  நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடி மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்

  2. 2

    பிறகு அதனை மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்

  3. 3

    கத்தரிக்காயில் மேலே உள்ள காம்பை பாதியாக வெட்டி பிறகு அதனை 6 முதல் 8 பாகங்களாக கீறிக் கொள்ளவும்

  4. 4

    இனி அரைத்து வைத்த பொடியை சிறிதளவு எடுத்து கத்தரிக்காயின் உள்ளே வைத்து அழுத்தவும்

  5. 5

    இனி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்

  6. 6

    பிறகு அதனை பொடி மசாலா வைத்த கத்தரிக்காயுடன் சேர்த்து மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்

  7. 7

    அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்

  8. 8

    கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் மீதமுள்ள பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

  9. 9

    இப்பொழுது முறுமுறுப்பான பொடி கத்தரிக்காய் வறுவல் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes