அவல்-உருளைக்கிழங்கு கட்லெட்

Navas Banu
Navas Banu @cook_17950579

அவல்-உருளைக்கிழங்கு கட்லெட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்அவல்
  2. 2உருளைக்கிழங்கு
  3. சிறிதளவுபச்சை பட்டாணி
  4. 2 டேபிள் ஸ்பூன்சோள மாவு
  5. 1வெங்காயம்
  6. 2பச்சை மிளகாய்
  7. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்

  3. 3

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கைப்பிடி அவலைப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அவல்,மசித்த உருளைக்கிழங்கு, மசித்த பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து கொள்ளவும்.

  7. 7

    சோள மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

  8. 8

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளை கரைத்த சோள மாவில் முக்கி,பொடித்த அவலில் புரட்டி தோசைக் கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமாகும் போது எடுக்கவும்.

  9. 9

    சூப்பரான அவல்-உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes