வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#walnut
வால்நட் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகமாக முடி உதிர்கிறது முடி உதிர்வை கட்டுப்படுத்த வால்நட் சாப்பிடுவது மிகவும் நல்லது.
வால்நட் தனியாக சாப்பிடும் பொழுது ஆயில் வாசனையுடன் அவ்வளவு ருசியாக இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் .ஆகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் நாம் சமைத்து தர வேண்டும் வால் நட் வெண்ணை பேரிச்சை சேர்த்து லட்டுகளாக பிடிக்க சுவை அலாதியாக இருக்கும் எனவே இந்த ரெசிபியை பகிர்கின்றேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 servings
  1. 1கப் வால்நெட்
  2. 1/2கப் சர்க்கரை
  3. 1கப் டேட்ஸ்
  4. 1/4கப் பட்டர்
  5. 2ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  6. 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் வால்நட்டை சிறு சிறுத் துண்டுகளாக உடைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு தேன் கலர் வரும் வரை மிதமானத் தீயில் கிளறி விடவும். தேன் கலர் வந்ததும் பட்டறை அத்துடன் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

  3. 3

    இப்பொழுது பேரிச்சம் பழத்தை சூடு நீரில் ஊற வைத்து அத்துடன் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து மிக்சியில் அரைத்து விழுதாக எடுக்கவும். அரைத்த இந்த விழுதை கடை உள்ள கலவையுடன் சேர்த்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை கலக்கவும்..

  4. 4

    சட்டியில் ஒட்டாத அளவு வரும் வரை கலக்கவும் கடைசியாக வால்நட்டை அத்துடன் சேர்த்து கிளறி ஆறவிடவும்

  5. 5

    இப்பொழுது தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி வால்நெட் வைத்து அலங்கரித்து பரிமாற சுவையான வால்நட் டேட்ஸ் காட்சி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes